சட்டையைப் பிடித்து புரளவும் தெரிந்தது
கட்டிப் பிடித்து உருளவும் தெரிந்தது
நாட்கள், மாதங்கள், வருடங்கள் கழித்து,
ரத்தமும் சதையும் வளரும் வேளையில்
மூளையும் வளர நினைத்தது
சந்தோஷம் ஒன்றே குறியென்ற மழலையை
சின்னா பின்னமாக்கி,
சமூக அமைப்பில் 'தான்' என்ற என்னமோ
மூளையின் மூலையில் ஊடுருவி
உடல் முழுதும் பரவியது
சந்தோஷம் போனது
சாபங்கள் சிரித்தது
'ஏன் வளர்ந்தோம்?'
என்று தினம் எண்ணும் அளவிற்கு
வாழ்கை, வெறுப்பை வேரோடு பதித்தது
பேருந்து நிற்காமல் ஓடிடவே,
சக்கரம், ஓடியே தேய்கிறது
கடந்து வரும் சாலைகள்,
குண்டும் குழியுமாய்
தூக்கி வாரிப் போட்டிடவே
வாழ்கை என்னதும் சக்கரம்
வடிவிழந்து போகிறது
- சுந்தர் ராம் (03/08/2017) -
Showing posts with label kavidhai. Show all posts
Showing posts with label kavidhai. Show all posts
Thursday, August 3, 2017
Tuesday, September 6, 2016
#நீ
"உனக்கு புடிச்ச விஷங்களை பத்தி சொல்லு"
.........
"என்ன மாறி விஷயம்?"
.........
"என்ன தோனுதோ சொல்லு. கண்ணை மூடிக்கிட்டு என்ன வேணும்னா சொல்லு"
.........
"ECR, அங்க வேகமா காலி ரோட் ல கார் ஓட்றது, பீச், பேப்பர் கப் ல காபி, கிரிக்கெட், காலேஜ், பஸ் பயணம், பறக்கும் ரயில், ரயில்வே ஸ்டேஷன், வால்கிங், சரவண பவன், சத்யம் தியேட்டர், பாப் கார்ன், ஆவின், மஞ்சள் வெயில், மழை, தாத்தா பாட்டி, காலங்காத்தால மரங்களுக்கு நடுல வர வெளிச்சம், குயில் சத்தம், மெசேஜ் டோன் .... அப்புறம்...."
.........
"அப்புறம் என்ன?"
.........
"நீ"
.........
Friday, September 2, 2016
முதல் பயணம்
"நான் போட்டு விடவா?" என்று அழகான புன் சிரிப்புடன் கேட்டான் அவன்
..........
ஒரு குழந்தையை போல் முகத்தை வைத்துக்கொண்டு தலை அசைத்தாள் அவள்
..........
அவள் அருகே தன் கைகளை கொண்டு சென்று சீட் பெல்ட் அணிவித்து விட்டான். இடையில் இருந்த கைகளை அவள் எடுக்கையிலே, வளையலின் சலசலப்புச் சத்தம். அவளிடம் ஏதும் வெளிப்படுத்தாமல் தனக்கு பிடித்த டியூனை ரசித்தான் அவன்
..........
விமான விதிமுறைகளை பணிப்பெண்கள் சொல்ல, மெதுவாய் புறப்பட்ட விமானத்தில் தொடங்கியது, ட்ரெடிஷனல் அரேஞ்சுடு மேரேஜ் செய்த அவர்களின் தேன்நிலவு
..........
அவளுக்கு அதுவே முதல் விமான பயணம். உற்சாகமாய் இருந்தாள், கொஞ்சம் பயத்துடன். முதல் முறை விமானம் அதிர்ந்த போது அவனுடைய இடதுகையை நெறுக்கிப் பிடித்து கொண்டாள் அவள்
..........
மறுநொடி, இருவிழிகள் ஒன்றை ஒன்று நோக்கியது. மெலிதாய் நகைக்க உதட்டிற்கு காரணம் கிடைத்தது. விமானத்துடன் சேர்ந்து இருவரின் காதலும் பரக்கத் தொடங்கியது. அவன் தோளில் சரணடைந்தாள் அவள்
..........
இதயம் இர்ரெகுலராய் துடித்தது.
பொருத்தம் பர்ஃபெக்டாய் இருந்தது
..........
அந்த நொடி, வெகு விரைவில் தன்னை மணக்க சம்மதித்த அவளை எண்ணி புல் அரித்தான் அவன். தன் சீல் பெல்ட்டை அணிந்த போது, அதுவரை சர்க்கஸ்ட்டிக் ஆகா இருந்த அவன் அன்று ரொமான்டிக் ஆக மாறியதை உணர்ந்து, நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்கினாள் அவள்
..........
அறிமுகமே அற்ற இருவருடன் புறப்பட்ட விமானம், இருவருக்குள் முதல் நெருக்கத்தை உணர வைத்தது.
..........
Sunday, August 28, 2016
முதல் நாள் இன்று
"மூணு வருஷம் முன்னாடி, இதே இடம், உன் ட்ரீட், ஞாபகம் இருக்கா?" என்றான் அவன்
..........
"உன்னை ரெஃபர் பண்ணதுல ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்துச்சு, ரெஃபரல் போனஸ் வந்துச்சு" என்றாள் அவள்
..........
"உனக்கு ரெஃபரல் போனஸ் வந்ததாலே ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்துச்சு, நீ ட்ரீட் கொடுத்த" என்றான் அவன்
..........
"அந்த ஃபர்ஸ்ட ட்ரீட் தான், நம்ம ஃபர்ஸ்ட டேட்-ஆ மாறுச்சு" என்றாள் உற்சாகத்துடன் அவள்
..........
"அந்த ஃபர்ஸ்ட டேட்-ல தான் என் புது மொபைல் கீழ விழுந்து கிராக் ஆச்சு, கூடவே சேந்து நானும் கிராக் ஆனேன்" என்றான் அவன்
..........
Sunday, February 14, 2016
ஒருநொடியும் விலகாமல்
ஒருநொடியும் விலகாமல்
இருதிவரை கைகோர்த்து
மூன்றாம் உலகப்போராய்
நாற்காலம் சண்டையிட்டு
ஐம்புலனை அடக்கிற்ற
ஆறுவிரல் ஆணென்னை
ஏழரைச் சனியாகி
எத்திசையும் காதலித்து
நவக்கிரகம் சுற்றாற்போல்
பைத்தியமாய் சுற்றவைத்தாய்
Saturday, February 13, 2016
உல்லாசம் கொள்வேனோ
உன்னோடு கை கோர்த்து
உன் கண்ணை நான் பார்த்து
உன் குரல் தினம் கேட்டு
உன் சமையல் வாய்ருசித்து
உன் பெயரை சுவாசித்து
உனை மட்டும் நேசித்து
உயிரோடு உள்ள வரை
உல்லாசம் கொள்வேனோ?
Tuesday, December 8, 2015
வெள்ளப்பெருக்கு - வெளியே நிவாரணம் - ஆயிரம் நன்றிகள் - அரசியல் பன்றிகள்
துயரத்தை கண்டவுடன்
கடும் மழையிலும்
கடல் போன்ற வெள்ளத்திலும்
தன் உயிரையும் பொருட்படுத்தாமல்
களத்தில் இறங்கிய இளைஞர்களும்
ரோட்டிலே பீச்சிலே பார்கிலே
வெட்டியாய் திரிந்து செல்பி எடுத்து
செக்-இன் செய்தாலும்
பேஸ் புக் இல் போட்டதும்
தனுஷ்-இன் வி.ஐ.பி படம் போல்
ஒரே நாளில் கூடிய
வேலை இல்லா பட்டதாரிகளும்
வெளியிலே உள்ள ஆபத்தை அறிந்தும்
தன் மகனை தடுக்காமல், உதவித்து
பனி புரிந்திட ஊன்றுகோலாய் இருந்த
அவர்களின் பெற்றோரும்
உதவிய வேற்று மாநில ஹீரோக்களும்
நிஜ வாழ்க்கை ஹீரோக்களும்
RJ_Balaji உம் Actor_Siddharth உம்
நாளொன்றுக்கு மூன்று முறை தன்
பிஸியான நாட்களிலும் கூட மக்களுக்காக
அறிவுப்பூர்வமாக, மிகத் துல்லியமாக,
கல்வியூட்டும் விதமாக விதிகளை விவரித்து
முன்கூட்டியே வானில் வருவதுரைத்த
தமிழ்நாடு வெதர்மேனும்
தான் வாழும் குப்பம் அழிந்தாலும்
தவிக்கும் மக்களை மீட்டெடுக்க
படகுகள் கொண்டு வந்து காப்பாற்றிய பின்
நீர் வடிந்த சாலைகளில் குப்பை தொட்டி போல்
நிற்கும் படகுகளை எடுத்துச் செல்ல வழியில்லாமல் ஏங்கும்
மீனவத் தோழர்களும்
கடும் நாற்றமும், கொடும் நோய்களும்
பொருட்படுத்தாமல் குறைந்த கூலிக்கு
பாதளசாக்கடை அடைப்பை அடியோடு சுத்தம்
செய்யும் கடவுள்களும்
இரவு பகல் கண் விழித்து
மக்கள் சொகுசாய் வாழ
வீழ்ந்த மின்கம்பங்கள் ஏறி
மழை நின்ற ஒரே நாளில்
சென்னையின் மின்சார பிரச்சனைகளை
தீர்த்த ஹனுமன்களும்
தன் காசில் துணி வாங்கி
தன் வீட்டில் சமைத்து
தான் வாடகைக்கு எடுத்த லாரியில்
சென்ற பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதை
பொருட்படுத்தாமல் சுயநலமற்று
ஸ்டிக்கருடன் பொருட்களை விநியோகித்த
நல்ல உள்ளம் கொண்ட வள்ளல்களும்
தொடர்ந்து நான்கு தினங்கள் தன்
வருமானம் இழந்து பாடலின்றி விளம்பரமின்றி
தூக்கம் துலைத்து மிகச் சிறப்பாய்
whatsapp மூலம் சென்னைக்கு உதவிய
104.8 FM நண்பர்களும்
அத்தனை தேவைகளையும்
அணைத்து இணையதளங்களிலும் ஷேர் செய்து
அனைவரையும் சென்றடைய
உறுதுணையாய் நின்ற
ஆன்லைன் ஆதரவாளர்களும்
தன்னார்வத் தொண்டர்களும்
இலவச பேருந்துகள் இயக்கிய கேரள அரசும்
மூங்கில் படகுகள் அனுப்பிய சேலத்து மக்களும்
ஊரிலே எங்கும் பிஸ்கட் ஸ்டாக் இல்லை என்று சொல்லும்
அளவிற்கு உணவுப் பொருட்கள் அனுப்பிய கோவை மக்களும்
வானம் மிலிட்டரி மற்றும் கப்பல் படைகளும்
கர்பினிப் பெண்களை காப்பாற்றிய டாக்டர்களும்
பல மேப்புகளை உருவாக்கிய கீக்கு-களும்
இலவசமாய் மருந்துகள் வழங்கிய மெடிக்கல் ஷாப்பு களும்
இலவசமாய் சவாரி செய்த ஆட்டோ ஓட்டுனரும்
இதுவரையில் உலகில் எங்கும் கண்டிடாத அளவில்
ஒற்றுமையை உணர்த்திய சென்னை மக்களும்
இது போன்ற மனிதர்கள்
வாழும் இந்த மண்ணில்
வெறி பிடித்த
சில அரசியல் பன்றிகள்
வெட்டிச் சம்பளம் வாங்கிச்
சுற்றி வருகின்றன - வோ(வே)ட்டிற்கு!
கடல் போன்ற வெள்ளத்திலும்
தன் உயிரையும் பொருட்படுத்தாமல்
களத்தில் இறங்கிய இளைஞர்களும்
ரோட்டிலே பீச்சிலே பார்கிலே
வெட்டியாய் திரிந்து செல்பி எடுத்து
செக்-இன் செய்தாலும்
பேஸ் புக் இல் போட்டதும்
தனுஷ்-இன் வி.ஐ.பி படம் போல்
ஒரே நாளில் கூடிய
வேலை இல்லா பட்டதாரிகளும்
வெளியிலே உள்ள ஆபத்தை அறிந்தும்
தன் மகனை தடுக்காமல், உதவித்து
பனி புரிந்திட ஊன்றுகோலாய் இருந்த
அவர்களின் பெற்றோரும்
உதவிய வேற்று மாநில ஹீரோக்களும்
நிஜ வாழ்க்கை ஹீரோக்களும்
RJ_Balaji உம் Actor_Siddharth உம்
நாளொன்றுக்கு மூன்று முறை தன்
பிஸியான நாட்களிலும் கூட மக்களுக்காக
அறிவுப்பூர்வமாக, மிகத் துல்லியமாக,
கல்வியூட்டும் விதமாக விதிகளை விவரித்து
முன்கூட்டியே வானில் வருவதுரைத்த
தமிழ்நாடு வெதர்மேனும்
தான் வாழும் குப்பம் அழிந்தாலும்
தவிக்கும் மக்களை மீட்டெடுக்க
படகுகள் கொண்டு வந்து காப்பாற்றிய பின்
நீர் வடிந்த சாலைகளில் குப்பை தொட்டி போல்
நிற்கும் படகுகளை எடுத்துச் செல்ல வழியில்லாமல் ஏங்கும்
மீனவத் தோழர்களும்
கடும் நாற்றமும், கொடும் நோய்களும்
பொருட்படுத்தாமல் குறைந்த கூலிக்கு
பாதளசாக்கடை அடைப்பை அடியோடு சுத்தம்
செய்யும் கடவுள்களும்
இரவு பகல் கண் விழித்து
மக்கள் சொகுசாய் வாழ
வீழ்ந்த மின்கம்பங்கள் ஏறி
மழை நின்ற ஒரே நாளில்
சென்னையின் மின்சார பிரச்சனைகளை
தீர்த்த ஹனுமன்களும்
தன் காசில் துணி வாங்கி
தன் வீட்டில் சமைத்து
தான் வாடகைக்கு எடுத்த லாரியில்
சென்ற பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதை
பொருட்படுத்தாமல் சுயநலமற்று
ஸ்டிக்கருடன் பொருட்களை விநியோகித்த
நல்ல உள்ளம் கொண்ட வள்ளல்களும்
தொடர்ந்து நான்கு தினங்கள் தன்
வருமானம் இழந்து பாடலின்றி விளம்பரமின்றி
தூக்கம் துலைத்து மிகச் சிறப்பாய்
whatsapp மூலம் சென்னைக்கு உதவிய
104.8 FM நண்பர்களும்
அத்தனை தேவைகளையும்
அணைத்து இணையதளங்களிலும் ஷேர் செய்து
அனைவரையும் சென்றடைய
உறுதுணையாய் நின்ற
ஆன்லைன் ஆதரவாளர்களும்
தன்னார்வத் தொண்டர்களும்
இலவச பேருந்துகள் இயக்கிய கேரள அரசும்
மூங்கில் படகுகள் அனுப்பிய சேலத்து மக்களும்
ஊரிலே எங்கும் பிஸ்கட் ஸ்டாக் இல்லை என்று சொல்லும்
அளவிற்கு உணவுப் பொருட்கள் அனுப்பிய கோவை மக்களும்
வானம் மிலிட்டரி மற்றும் கப்பல் படைகளும்
கர்பினிப் பெண்களை காப்பாற்றிய டாக்டர்களும்
பல மேப்புகளை உருவாக்கிய கீக்கு-களும்
இலவசமாய் மருந்துகள் வழங்கிய மெடிக்கல் ஷாப்பு களும்
இலவசமாய் சவாரி செய்த ஆட்டோ ஓட்டுனரும்
இதுவரையில் உலகில் எங்கும் கண்டிடாத அளவில்
ஒற்றுமையை உணர்த்திய சென்னை மக்களும்
இது போன்ற மனிதர்கள்
வாழும் இந்த மண்ணில்
வெறி பிடித்த
சில அரசியல் பன்றிகள்
வெட்டிச் சம்பளம் வாங்கிச்
சுற்றி வருகின்றன - வோ(வே)ட்டிற்கு!
Location:
Chennai, Tamil Nadu, India
Monday, June 15, 2015
கல்யாண சமையல் சாதம்
கல்லூரி விடுதி, பாத்ரூம் லைனில்,
பக்கெட் வைத்துக் காத்திருந்தேன்
பக்கெட் வைத்துக் காத்திருந்தேன்
பாத்ரூம் சென்று முடித்த பின்னே,
தண்ணீர் வரக் காத்திருந்தேன்
தண்ணீர் வரக் காத்திருந்தேன்
மெஸ் சென்று சாப்பாட்டிற்கு,
தட்டை தட்டிக் காத்திருந்தேன்
தட்டை தட்டிக் காத்திருந்தேன்
லேட்டாய் சென்ற காரணத்தால்,
வகுப்பின் வெளியே காத்திருந்தேன்
வகுப்பின் வெளியே காத்திருந்தேன்
க்ளாஸ்ஸில் உள்ள கன்னியரின்,
கண்கள் பார்த்துக் காத்திருந்தேன்
கண்கள் பார்த்துக் காத்திருந்தேன்
என்னை கவர்ந்த கள்ளி அவள்,
என்னை பார்க்க காத்திருந்தேன்
என்னை பார்க்க காத்திருந்தேன்
மூன்று மாதம் பின் தொடர்ந்தேன்,
நம்பர் வாங்க காத்திருந்தேன்
நம்பர் வாங்க காத்திருந்தேன்
வாங்கிய பின் அழைக்காமல்,
whatsapp DP-ஐ பார்த்திருந்தேன்
whatsapp DP-ஐ பார்த்திருந்தேன்
மாலை நேரம் நோட்டமிட,
கான்டீன் சுவரில் காத்திருந்தேன்
கான்டீன் சுவரில் காத்திருந்தேன்
காகித டம்ளர் கிழியும் வரை, அதில்
coke-ஐ ஊத்திக் குடித்திருந்தேன்
coke-ஐ ஊத்திக் குடித்திருந்தேன்
அவளேறிச் சென்றப் பேருந்தை,
வெறித்தே தினமும் பார்த்திருந்தேன்
வெறித்தே தினமும் பார்த்திருந்தேன்
ஓடிச் சென்று ஒரு மாலை,
footboard ஒன்றில் கால் பதித்தேன்
footboard ஒன்றில் கால் பதித்தேன்
டிக்கெட் வாங்கும் பொழுதினிலே, எனை
பார்பாளோ என்று காத்திருந்தேன்
பார்பாளோ என்று காத்திருந்தேன்
கண்கள் என்னை காணும்வரை,
கனவுகள் கண்டு காத்திருந்தேன்
கனவுகள் கண்டு காத்திருந்தேன்
கனவுகள் கண்டு நடு ரோட்டில்,
கால்வாய் ஓரம் கிழ்விழுந்தேன்
கால்வாய் ஓரம் கிழ்விழுந்தேன்
கண்ணிமைக்கும் நேரத்திலே,
கடந்து சென்றாள் கல் நெஞ்சி
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்,
பல வருடம், காத்திருந்தேன்
கன்னியவள் திருமணத்தில், இன்று
Sunday, November 4, 2012
கற்பவை கற்றபின்
மாந்தர் நின்சொல் அறவே மதியார்
அச்சொல் பொன்சொல் போன்றதெனினும்
அவருள் ஒருவராய் நீ இல்லாவிடின்
மாந்தர் நின்சொல் பொன்சொல் என்பார்
நீ சிரும்பிகைக்கும் வேளையிலும்
நீயே அவரின் அவசியம் எனில்
தோல்வி உற்றேன் பலமுறை நான்
எனினும், தோள்கொடுக்க யாருமில்லை
புரிந்து கொண்டேன் இறுதியில் தான்
உன் உயிர்த் தோழன் நீயே என்று
அச்சொல் பொன்சொல் போன்றதெனினும்
அவருள் ஒருவராய் நீ இல்லாவிடின்
மாந்தர் நின்சொல் பொன்சொல் என்பார்
நீ சிரும்பிகைக்கும் வேளையிலும்
நீயே அவரின் அவசியம் எனில்
தோல்வி உற்றேன் பலமுறை நான்
எனினும், தோள்கொடுக்க யாருமில்லை
புரிந்து கொண்டேன் இறுதியில் தான்
உன் உயிர்த் தோழன் நீயே என்று
Labels:
kavidhai
Friday, June 15, 2012
சென்னை எனக்காய் காத்திருக்கு!!!
முதுகில் பெரியதோர் மூட்டைக் கட்டி
மூச்சுத் தெரிக்கச் சுமந்து வந்து
மூன்றாம் பெட்டியின் பட்டியலில்
முப்பது முறையென் பெயரைத் தேடிச்
சென்றேன் எந்தன் ரயிலினுள்ளே
சென்னை எனக்காய் காத்திருக்கு!!!
Labels:
kavidhai
Wednesday, April 13, 2011
My first Kavidhai
அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்று
மாலை வரை மாடுபோல் உழைத்து
மாதா மாதம் ஊதியம் பெற்றாலும்
சாலையில் கிடக்கும் ரூபாய் நோட்டு
சிரித்து கொண்டே வா வா என்கிறது!!!!
Subscribe to:
Posts (Atom)



