Tuesday, December 8, 2015

வெள்ளப்பெருக்கு - வெளியே நிவாரணம் - ஆயிரம் நன்றிகள் - அரசியல் பன்றிகள்


துயரத்தை கண்டவுடன்
கடும் மழையிலும்
கடல் போன்ற வெள்ளத்திலும்
தன் உயிரையும் பொருட்படுத்தாமல்
களத்தில் இறங்கிய இளைஞர்களும்

ரோட்டிலே பீச்சிலே பார்கிலே
வெட்டியாய் திரிந்து செல்பி எடுத்து
செக்-இன் செய்தாலும்
பேஸ் புக் இல் போட்டதும்
தனுஷ்-இன் வி.ஐ.பி படம் போல்
ஒரே நாளில் கூடிய
வேலை இல்லா பட்டதாரிகளும்

வெளியிலே உள்ள ஆபத்தை அறிந்தும்
தன் மகனை தடுக்காமல், உதவித்து
பனி புரிந்திட ஊன்றுகோலாய் இருந்த
அவர்களின் பெற்றோரும்

உதவிய வேற்று மாநில ஹீரோக்களும்  
நிஜ வாழ்க்கை ஹீரோக்களும்
RJ_Balaji உம்  Actor_Siddharth உம்

நாளொன்றுக்கு மூன்று முறை தன்
பிஸியான நாட்களிலும் கூட மக்களுக்காக
அறிவுப்பூர்வமாக, மிகத் துல்லியமாக,
கல்வியூட்டும் விதமாக விதிகளை விவரித்து
முன்கூட்டியே வானில் வருவதுரைத்த
தமிழ்நாடு வெதர்மேனும்

தான் வாழும் குப்பம் அழிந்தாலும்
தவிக்கும் மக்களை மீட்டெடுக்க
படகுகள் கொண்டு வந்து காப்பாற்றிய பின்
நீர் வடிந்த சாலைகளில் குப்பை தொட்டி போல்
நிற்கும் படகுகளை எடுத்துச் செல்ல வழியில்லாமல் ஏங்கும்
மீனவத் தோழர்களும்

கடும் நாற்றமும், கொடும் நோய்களும்
பொருட்படுத்தாமல் குறைந்த கூலிக்கு
பாதளசாக்கடை அடைப்பை அடியோடு சுத்தம்
செய்யும் கடவுள்களும்

இரவு பகல் கண் விழித்து
மக்கள் சொகுசாய் வாழ
வீழ்ந்த மின்கம்பங்கள் ஏறி
மழை நின்ற ஒரே நாளில்
சென்னையின் மின்சார பிரச்சனைகளை  
தீர்த்த ஹனுமன்களும்

தன் காசில் துணி வாங்கி
தன் வீட்டில் சமைத்து
தான் வாடகைக்கு எடுத்த லாரியில்
சென்ற பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதை
பொருட்படுத்தாமல் சுயநலமற்று
ஸ்டிக்கருடன் பொருட்களை விநியோகித்த
நல்ல உள்ளம் கொண்ட வள்ளல்களும்

தொடர்ந்து நான்கு தினங்கள் தன்
வருமானம் இழந்து பாடலின்றி விளம்பரமின்றி
தூக்கம் துலைத்து மிகச் சிறப்பாய்
whatsapp மூலம் சென்னைக்கு உதவிய
104.8 FM நண்பர்களும்

அத்தனை தேவைகளையும்
அணைத்து இணையதளங்களிலும் ஷேர் செய்து
அனைவரையும் சென்றடைய
உறுதுணையாய் நின்ற
ஆன்லைன் ஆதரவாளர்களும்

தன்னார்வத் தொண்டர்களும்
இலவச பேருந்துகள் இயக்கிய கேரள அரசும்
மூங்கில் படகுகள் அனுப்பிய சேலத்து மக்களும்
ஊரிலே எங்கும் பிஸ்கட் ஸ்டாக் இல்லை என்று சொல்லும்
அளவிற்கு உணவுப் பொருட்கள் அனுப்பிய கோவை மக்களும்
வானம் மிலிட்டரி மற்றும் கப்பல் படைகளும்
கர்பினிப் பெண்களை காப்பாற்றிய டாக்டர்களும்
பல மேப்புகளை உருவாக்கிய கீக்கு-களும்
இலவசமாய் மருந்துகள் வழங்கிய மெடிக்கல் ஷாப்பு களும்
இலவசமாய் சவாரி செய்த ஆட்டோ ஓட்டுனரும்
இதுவரையில் உலகில் எங்கும் கண்டிடாத அளவில்
ஒற்றுமையை உணர்த்திய சென்னை மக்களும்  

இது போன்ற மனிதர்கள்
வாழும் இந்த மண்ணில்

வெறி பிடித்த
சில அரசியல் பன்றிகள்
வெட்டிச் சம்பளம் வாங்கிச்
சுற்றி வருகின்றன - வோ(வே)ட்டிற்கு!

2 comments: