Friday, August 31, 2012

ஒரு நாளில் வாழ்க்கை

ஏழு மணிக்கு அலாரம் வெச்சி எட்ர வெறிக்கும் snooze பண்ணி ஒம்போது மணிக்கு எந்திரிச்சி, பல் தேச்சி, பாத்ரூம்-கு லைன் ல நின்னு தண்ணி வராத கொழாய தட்டி பாத்து தெறந்து விட்டு, கடைசி சொட்டு தண்ணி வெறிக்கும், வெறிக்க வெறிக்க use பண்ணி, வேண்டா வெறுப்புக்கு வீனா குளிச்ச காண்டா மிருகம் மாறி குளிச்சிட்டு வந்து, வெளிய நின்னா வீடு full-a கருமம் புடிச்ச நறுமனமா மணக்கும். அது தான் நம்மே ரூம்-mate ஓட scent-u. வேணாம் மச்சான் வேணாம்-னு எவ்ளோ சொன்னாலும் கேக்காம சுத்தி சுத்தி ஸ்ப்ரே அடிப்பான்.

சரின்னு அவன் களம்புன ஒடனே, கரிகந்தையா கசங்கி கடக்குற ஷர்ட்-ம் பான்ட்-ம் எடுத்து, அயர்ன் கூட பண்ணாம, அவசர அவசரமா போட்டுன்னு வந்து, மொபைல், பர்ஸ், கர்சீப், bag-னு எல்லாத்தையும் மறக்காம எடுத்துட்டு வெளிய வந்தா, பின்னாடியே தொரதிகிட்டு ஒருத்தன் ஓடி வருவான், அவன் தான் நம்ம பிளட்ஸ் ஓட வாட்ச்மேன். என்னயா வேணும்னு கேட்டா, maintenance-mantenance-னு சொல்லி உசுர வாங்குவான். பேசுன காச விட ரெண்டு மடங்கா கேப்பான். காசில்லயா, atm-ல எடுத்து நாளைக்கு தரேன்னு நாலு நாளா டபாய்ச்சி, ஓடி வந்து ரோட்-ல நின்னா, தாண்டிப் போகும் நம்ம ஆபீஸ் பஸ்.

சரி transport-கு போன் a போட்டு பஸ் நிக்காம போயிருச்சுன்னு சொன்னா, அடுத்த பஸ்ஸுக்கு இன்னும் அர மணி நேரம் ஆகும்னு சொல்லுவான். சரின்னு போற வற பொண்ணுங்களேல்லாம் பாத்துக்குன்னே டைம் போறதே தெரியாம, தெறிக்க தெறிக்க காத்து நின்னா, என் ஸ்டாப்-ல நிக்க வேண்டிய பஸ், அந்நிக்குன்னு பாத்து அடுத்த ஸ்டாப் ல இருந்து கெளம்பும். ஆட்டோ புடிச்சி பஸ்-a தொரத்தி, அடுத்த ஸ்டாப் ல ரவுண்டு கட்டி மடக்கி, ஓடிப் போய் பஸ்ல ஏறினா, ஹப்பாட-னு இருக்கும். அன்னிகுனு பாத்து முன்னாடி போற பஸ், முட்டு சந்து ல திரும்பும் போது, இன்டிகாடோர் ஓரம டமால் னு இடிப்பான்.