Friday, August 31, 2012

ஒரு நாளில் வாழ்க்கை

ஏழு மணிக்கு அலாரம் வெச்சி எட்ர வெறிக்கும் snooze பண்ணி ஒம்போது மணிக்கு எந்திரிச்சி, பல் தேச்சி, பாத்ரூம்-கு லைன் ல நின்னு தண்ணி வராத கொழாய தட்டி பாத்து தெறந்து விட்டு, கடைசி சொட்டு தண்ணி வெறிக்கும், வெறிக்க வெறிக்க use பண்ணி, வேண்டா வெறுப்புக்கு வீனா குளிச்ச காண்டா மிருகம் மாறி குளிச்சிட்டு வந்து, வெளிய நின்னா வீடு full-a கருமம் புடிச்ச நறுமனமா மணக்கும். அது தான் நம்மே ரூம்-mate ஓட scent-u. வேணாம் மச்சான் வேணாம்-னு எவ்ளோ சொன்னாலும் கேக்காம சுத்தி சுத்தி ஸ்ப்ரே அடிப்பான்.

சரின்னு அவன் களம்புன ஒடனே, கரிகந்தையா கசங்கி கடக்குற ஷர்ட்-ம் பான்ட்-ம் எடுத்து, அயர்ன் கூட பண்ணாம, அவசர அவசரமா போட்டுன்னு வந்து, மொபைல், பர்ஸ், கர்சீப், bag-னு எல்லாத்தையும் மறக்காம எடுத்துட்டு வெளிய வந்தா, பின்னாடியே தொரதிகிட்டு ஒருத்தன் ஓடி வருவான், அவன் தான் நம்ம பிளட்ஸ் ஓட வாட்ச்மேன். என்னயா வேணும்னு கேட்டா, maintenance-mantenance-னு சொல்லி உசுர வாங்குவான். பேசுன காச விட ரெண்டு மடங்கா கேப்பான். காசில்லயா, atm-ல எடுத்து நாளைக்கு தரேன்னு நாலு நாளா டபாய்ச்சி, ஓடி வந்து ரோட்-ல நின்னா, தாண்டிப் போகும் நம்ம ஆபீஸ் பஸ்.

சரி transport-கு போன் a போட்டு பஸ் நிக்காம போயிருச்சுன்னு சொன்னா, அடுத்த பஸ்ஸுக்கு இன்னும் அர மணி நேரம் ஆகும்னு சொல்லுவான். சரின்னு போற வற பொண்ணுங்களேல்லாம் பாத்துக்குன்னே டைம் போறதே தெரியாம, தெறிக்க தெறிக்க காத்து நின்னா, என் ஸ்டாப்-ல நிக்க வேண்டிய பஸ், அந்நிக்குன்னு பாத்து அடுத்த ஸ்டாப் ல இருந்து கெளம்பும். ஆட்டோ புடிச்சி பஸ்-a தொரத்தி, அடுத்த ஸ்டாப் ல ரவுண்டு கட்டி மடக்கி, ஓடிப் போய் பஸ்ல ஏறினா, ஹப்பாட-னு இருக்கும். அன்னிகுனு பாத்து முன்னாடி போற பஸ், முட்டு சந்து ல திரும்பும் போது, இன்டிகாடோர் ஓரம டமால் னு இடிப்பான்.



போச்சுடா, இன்னிக்கு ஆபீஸ் போய் சேந்த மாரி தான்-னு பஸ்ல உட்கந்துட்டுருப்போம். ரோட்ல வெட்டியா கை ஆட்டுற டிராபிக் போலீஸ் அப்போ தான் ரெண்டு பஸ்-அயும் ஓரம்கட்டி, ரூல்ஸ் ராமானுஜம் மாரி என்பத்தேட்டு செக்ஷன் படி ரூல்ஸ் சொல்லினு இருக்கும் போது, transport-கு கால் பண்ணா, இன்னொரு பஸ் is on the way-னு சொல்லுவாங்க. அதுக்கு ஒரு அர மணி நேரம் வெயிட் பண்ணி அந்த பஸ் a புடிக்கலாம்-னு நெனச்சா, கூட வந்த கும் figure-ஸ் லாம் ஆட்டோல ஏறி போய்டும்.

அப்புறம் வர்ற வேற பஸ் ல ஓடிப்போய் ஜன்னல் சீட்ட புடிச்சி, போய்ட்டே இருக்கும் போது அந்த கும் figureஸ்-ஓட ஆட்டோ வ ஓவர்டகே பண்ணும் போது வர பீலிங் இருக்கே, யப்பா :P , இதெல்லாம் நடந்து ஒரு வழிய தோராயமா ஒரு பதினோரு மணிக்கு ஆபீஸ் போய் சேந்தா, போன் ல ரெண்டு misseed கால் இருக்கும். ஒன்னு மேனேஜர், ஒன்னு டீம்-mate, கேட்டா மீட்டிங்-னு சொல்லுவாங்க. என்னமோ நான் தான் போய் என் டீம் மானத்த காப்பாத்த போற மாதிரி. கடைசில மீட்டிங்-um அட்டென்ட் பண்ணாம, ஒரு வேலையும் இல்லாம, போய் ஒரு பத்து நிமிஷத்துல லஞ்ச் சாப்டலம்னு cafeteria போவோம்.

அங்க நம்மள மாறியே நூத்து கணக்குல வெட்டிப் பசங்க உக்காந்து சாப்டிக்கிட்டு இருப்பானுங்க. சேர்-டேபிள்-a சுத்தி சுத்தி என்னமோ அவன் அப்பன் ஊட்டு சொத்து மாரி அங்கங்க போட்றதும், பன்னண்டு பேரு சுத்தி சுத்தி ரவுண்டு கட்டி உக்காந்து சாப்டுவாங்க. மொத்த cafeteria-வே திரும்பி பாக்குற மாறி. சரின்னு சாப்ட்டு சாப்ட்டு அலுத்து போன சவுத் இந்தியன் மீல்ஸ்-அ வாங்கி, வெந்தும் வேகத bangaladumpa (உருள கெழங்கு) curry-a சாப்டு, பொறுமையா எல்லரோடையும் ஊர்க்கதை பேசி முடிச்சி, ரெண்டு மணிக்கு திரும்ப ஆபீஸ்க்கு போனா, சத்தியமா சொல்றேன் சாமி என்ன பண்றதுன்னே தெரியாது. அவ்ளோ வேலை :P

ஆமா, facebook-ல நாலு பேரு ping பன்னிருபாங்க, gtalk-ல நாலு பேரு, எவ்ளோ பேரோட தான் பேசுறது ஒரே நேரத்துல, சரின்னு, ஒரு நாலு போட்டோ பாத்து அதுல ரெண்டு போட்டோவ ஷேர் பண்ணி, அப்டியே வீடியோ பாத்துட்டு பாட்டு கேட்டுகிட்டு, உக்காந்திட்டு இருந்தா, நாலு மணி ஆயிரும். இங்க evening snacks-னு சொல்லிட்டு, அட்லீஸ் பஜ்ஜி போண்டா-வாச்சு போடுவாங்க அப்பப்போ snacks-னு சொல்லிட்டு மசாலா தோச கூட போடுவாங்க. டீம் ஸ்னேக்க்ஸ்-னு ஒரு வாட்டி டீம்-மேட்ஸ் ஓட போயிட்டு, திருப்பி வந்து உக்காந்தா அப்ப தான நம்ம பசங்க ping பண்ணுவாங்க ஸ்னேக்ஸ் போலாமான்னு கேட்டு. சரி, ஏதோ நண்பன் கூப்பிடுரானே அப்டின்னு வேலைய கூட துச்சமா தூக்கி போட்டு, ஸ்னேக்க்ஸ் போயிட்டு வந்தா ஆறு மணி ஆய்டும்.

அதுக்கு மேல எங்கங்க வேல செய்றது!!

அப்புறம் ஆறர மணி பஸ்-எ புடிச்சி ஏழு மணிக்கு வீட்டு பக்கதுல எறங்குணா, ரெண்டு ஹோட்டல், ஒரு ஸ்வீட் ஷாப்-னு ஊரே கள-கட்டி இருக்கும். முடிஞ்ச வெறிக்கும் முக்கு-முக்கு-னு முக்கி மூக்கு முட்ட தின்னுட்டு, வீட்டுக்கு போய் உக்காந்த ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி நம்ம ரூம்மேட்ஸ் லாம் வருவாங்க. அப்புறம் என்னங்க, வீட்டுக்குள்ள கிரிக்கெட், ஊர் கதை, படம், கேம்ஸ் அப்டின்னு பிஸி-aah ஓடிடும் ஒரு நாள். மறுபடியும் ஏழு மணிக்கு அலாரம் வெச்சிட்டு ஒரு மணிக்கு தூங்க வேண்டிதான்.





ezhu manikku alarm vechi, etra verikkum snooze panni onbodhu manikku endirichi paltheichi, bathroom ku line la ninnu thanni varaadha kozhaaya thatti pathu therandhu vittu, kadaisi sottu thanni verikkum, verikka verikka use panni, venda veruppukku veena kulicha gaanda mirugam maari kulichitu vandhu, veliya ninna veedu fulla karumam pudicha narumanamaa manakkum. adhu dhan namma roommate oda scent-u. venam machaan venam nu evlo sonnalum kekkama sutthi sutthi spray adipaan.

sari nu avan kelambina udane, karikandhaya kasangi kadakkura shirt-um pant-um eduthu iron kuda pannama avasara avasarama potukunnu vandhu, mobile, purse, kerchief, bag-nu ellathaiyum marakkama eduthukitu veliya vandha pinnadiye thorathikittu oruthan odi varuvaan, avan dhaan namma flats oda watchman. ennaya venum nu ketta maintenance maintenance nu solli usura vaanguvaan. pesuna kaasa vida rendu madangaa keppan. kasillaiya, atm la eduthu nalaikku tharen nu naalu naala dabaaichi, odi vandhu road-la ninna, thaandi pogum namma office bus

sari, transport ku phone a potu bus nikkama poiruchu nu sonna, adutha bus - ku innum ara mani neram aagum nu solluvaan. sari nu pora vara ponungalellam pathukkune time poradhe teriyaama therikka therikka kaatthu ninna, en stop la nikka vendiya bus, annikunnu paathu, adutha stop la irundhu kelambum. auto pudichi bus a thorathi, adutha stop la round katti madakki odi poi bus la erina, happada-nu irukkum. annikkunnu paathu munnadi pora bus, muttu sandhu la thirumbum bodhu, indicator oramaa damaal nu idippaan.

pochu da, iniku office poi sendha mari dhan nu bus la ukkandutuirupom. roat la vettiya kai aattura traffic police appo dhan rendu bus ayum oram katti, rules ramanujam mari enbatthettu section padi rules sollinu irukkum bodhu transport ku caal panna, innoru bus is ondde way nu soluvanga. adhukku oru ara mani neram wait panni andha bus a pudikalaam nu nenacha, kooda vandha gum figures laam auto la eri poidum

appuram varra bus la odi poi jannal seat a pudichi, poitte irukkum bodhu andha gum figures oda auto va overtake pannum bodhu vara peeling irukke, yappa :P idhellam nadandhu oru vazhiya thoraayama oru pathinoru manikku office poi sendha, phone la rendu missed call irukkum, onnu manager innonnu teammate. ketta meeting nu soluvanga. ennamo naan dhan poi en team maanatha kaapatha pora madhiri. kadasila meeting um attend pannaama, oru velaiyum illama, poi oru pathu nimishathula lunch sapdalamnu cafeteria povom

anga nammala maariye noothu kanakkula vetti pasanga ukkandhu saptikitu irupanga. chair-table a suthi suthi ennamo avan appam veetu sothu mari anganga podradhum, pannandu peru suthi suthi roundu katti ukandhu sapduvanga. motha cafeteria ve tirumbi parkura madhiri. sari nu saptu saptu aluthu pona south indian meals a vaangi vendhum vegadha bangaladumpa curry(urula kezhangu) saptu, porumaya ellarodayum oorkadha pesi mudichi rendu manikku tirumba office ku pona, sathiyama solren saami enna panradhune teriyadhu. avlo velai :P

aama, facebook la naalu peru ping panirupanga, gtalk la naalu. evlo peroda dhan pesuradhu ore nerathula, sari nu oru naalu photo va pathu adhula rendu share panni, apdiye video pathutu paatu ketukitu, ukanditu irundha, naalu mani ayirum. inga evening snacks nu solikitu, atleast bajji bonda vachum poduvanga. appapo masala dosa kuda snacks ku poduvanga. team snacks nu oru vaati team mates oda poitu tiruppi vandhu ukkandha appa dhan namma pasanga ping pannuvanga. snacks polama nu ketu. sari edho nanban kupidurane nu solli, velaiyha kuda thuchama thuki potutu, snacks poitu vandha mani aaru aayidum

adhuku mela enga nga vela seiradhu

appuram aarara mani bus a pudichi ezhu manikku veetu palathula eranguna, rendu hotel, oru sweet shop nu oore kala katti irukkum. mudinja verikkum mukku mukku nu mukki, mookku mutta thinnuttu, veetuuku poi ukkandha oru rendu mani neram kazhichi namma roommates lam varuvanga. appuram ennanga, veetukulla cricket, oor kadhai, padam, games, apdinu busy ah odidum oru naal. marubadiyum ezhu manikku alarm vechitu oru manikku thoonga vendithaan.

No comments:

Post a Comment