கல்லூரி விடுதி, பாத்ரூம் லைனில்,
பக்கெட் வைத்துக் காத்திருந்தேன்
பக்கெட் வைத்துக் காத்திருந்தேன்
பாத்ரூம் சென்று முடித்த பின்னே,
தண்ணீர் வரக் காத்திருந்தேன்
தண்ணீர் வரக் காத்திருந்தேன்
மெஸ் சென்று சாப்பாட்டிற்கு,
தட்டை தட்டிக் காத்திருந்தேன்
தட்டை தட்டிக் காத்திருந்தேன்
லேட்டாய் சென்ற காரணத்தால்,
வகுப்பின் வெளியே காத்திருந்தேன்
வகுப்பின் வெளியே காத்திருந்தேன்
க்ளாஸ்ஸில் உள்ள கன்னியரின்,
கண்கள் பார்த்துக் காத்திருந்தேன்
கண்கள் பார்த்துக் காத்திருந்தேன்
என்னை கவர்ந்த கள்ளி அவள்,
என்னை பார்க்க காத்திருந்தேன்
என்னை பார்க்க காத்திருந்தேன்
மூன்று மாதம் பின் தொடர்ந்தேன்,
நம்பர் வாங்க காத்திருந்தேன்
நம்பர் வாங்க காத்திருந்தேன்
வாங்கிய பின் அழைக்காமல்,
whatsapp DP-ஐ பார்த்திருந்தேன்
whatsapp DP-ஐ பார்த்திருந்தேன்
மாலை நேரம் நோட்டமிட,
கான்டீன் சுவரில் காத்திருந்தேன்
கான்டீன் சுவரில் காத்திருந்தேன்
காகித டம்ளர் கிழியும் வரை, அதில்
coke-ஐ ஊத்திக் குடித்திருந்தேன்
coke-ஐ ஊத்திக் குடித்திருந்தேன்
அவளேறிச் சென்றப் பேருந்தை,
வெறித்தே தினமும் பார்த்திருந்தேன்
வெறித்தே தினமும் பார்த்திருந்தேன்
ஓடிச் சென்று ஒரு மாலை,
footboard ஒன்றில் கால் பதித்தேன்
footboard ஒன்றில் கால் பதித்தேன்
டிக்கெட் வாங்கும் பொழுதினிலே, எனை
பார்பாளோ என்று காத்திருந்தேன்
பார்பாளோ என்று காத்திருந்தேன்
கண்கள் என்னை காணும்வரை,
கனவுகள் கண்டு காத்திருந்தேன்
கனவுகள் கண்டு காத்திருந்தேன்
கனவுகள் கண்டு நடு ரோட்டில்,
கால்வாய் ஓரம் கிழ்விழுந்தேன்
கால்வாய் ஓரம் கிழ்விழுந்தேன்
கண்ணிமைக்கும் நேரத்திலே,
கடந்து சென்றாள் கல் நெஞ்சி
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்,
பல வருடம், காத்திருந்தேன்
கன்னியவள் திருமணத்தில், இன்று
No comments:
Post a Comment