Tuesday, September 6, 2016

#நீ

"உனக்கு புடிச்ச விஷங்களை பத்தி சொல்லு"
.........
"என்ன மாறி விஷயம்?"
.........
"என்ன தோனுதோ சொல்லு. கண்ணை மூடிக்கிட்டு என்ன வேணும்னா சொல்லு"
.........
"ECR, அங்க வேகமா காலி ரோட் ல கார் ஓட்றது, பீச், பேப்பர் கப் ல காபி, கிரிக்கெட், காலேஜ், பஸ் பயணம், பறக்கும் ரயில், ரயில்வே ஸ்டேஷன், வால்கிங், சரவண பவன், சத்யம் தியேட்டர், பாப் கார்ன், ஆவின், மஞ்சள் வெயில், மழை, தாத்தா பாட்டி, காலங்காத்தால மரங்களுக்கு நடுல வர வெளிச்சம், குயில் சத்தம், மெசேஜ் டோன் .... அப்புறம்...."
.........
"அப்புறம் என்ன?"
.........
"நீ"
.........



Friday, September 2, 2016

முதல் பயணம்

"நான் போட்டு விடவா?" என்று அழகான புன் சிரிப்புடன் கேட்டான் அவன்

..........

ஒரு குழந்தையை போல் முகத்தை வைத்துக்கொண்டு தலை அசைத்தாள் அவள்

..........

அவள் அருகே தன் கைகளை கொண்டு சென்று சீட் பெல்ட் அணிவித்து விட்டான். இடையில் இருந்த கைகளை அவள் எடுக்கையிலே, வளையலின் சலசலப்புச் சத்தம். அவளிடம் ஏதும் வெளிப்படுத்தாமல் தனக்கு பிடித்த டியூனை ரசித்தான் அவன் 

..........

விமான விதிமுறைகளை பணிப்பெண்கள் சொல்ல, மெதுவாய் புறப்பட்ட விமானத்தில் தொடங்கியது, ட்ரெடிஷனல் அரேஞ்சுடு மேரேஜ் செய்த அவர்களின் தேன்நிலவு

..........

அவளுக்கு அதுவே முதல் விமான பயணம். உற்சாகமாய் இருந்தாள், கொஞ்சம் பயத்துடன். முதல் முறை விமானம் அதிர்ந்த போது அவனுடைய இடதுகையை நெறுக்கிப் பிடித்து கொண்டாள் அவள்

..........

மறுநொடி, இருவிழிகள் ஒன்றை ஒன்று நோக்கியது. மெலிதாய் நகைக்க உதட்டிற்கு காரணம் கிடைத்தது. விமானத்துடன் சேர்ந்து இருவரின் காதலும் பரக்கத் தொடங்கியது. அவன் தோளில் சரணடைந்தாள் அவள்

..........

இதயம் இர்ரெகுலராய் துடித்தது. 
பொருத்தம் பர்ஃபெக்டாய் இருந்தது

..........

அந்த நொடி, வெகு விரைவில் தன்னை மணக்க சம்மதித்த அவளை எண்ணி புல் அரித்தான் அவன். தன் சீல் பெல்ட்டை அணிந்த போது, அதுவரை சர்க்கஸ்ட்டிக் ஆகா இருந்த அவன் அன்று ரொமான்டிக் ஆக மாறியதை உணர்ந்து, நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்கினாள் அவள்

..........

அறிமுகமே அற்ற இருவருடன் புறப்பட்ட விமானம், இருவருக்குள் முதல் நெருக்கத்தை உணர வைத்தது. 

..........



Sunday, August 28, 2016

முதல் நாள் இன்று

"மூணு வருஷம் முன்னாடி, இதே இடம், உன் ட்ரீட், ஞாபகம் இருக்கா?" என்றான் அவன்
..........
"உன்னை ரெஃபர் பண்ணதுல ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்துச்சு, ரெஃபரல் போனஸ் வந்துச்சு" என்றாள் அவள்
..........
"உனக்கு ரெஃபரல் போனஸ் வந்ததாலே ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்துச்சு, நீ ட்ரீட் கொடுத்த" என்றான் அவன்
..........
"அந்த ஃபர்ஸ்ட ட்ரீட் தான், நம்ம ஃபர்ஸ்ட டேட்-ஆ மாறுச்சு" என்றாள் உற்சாகத்துடன் அவள்
..........
"அந்த ஃபர்ஸ்ட டேட்-ல தான் என் புது மொபைல் கீழ விழுந்து கிராக் ஆச்சு, கூடவே சேந்து நானும் கிராக் ஆனேன்" என்றான் அவன்
..........
"அதெல்லாம் ஒரு காலம்!!" என்று நகைத்துக்கொண்டே ஆர்டர் செய்தனர் இருவரும்
..........


Sunday, February 14, 2016

ஒருநொடியும் விலகாமல்

ஒருநொடியும் விலகாமல் இருதிவரை கைகோர்த்து மூன்றாம் உலகப்போராய் நாற்காலம் சண்டையிட்டு ஐம்புலனை அடக்கிற்ற ஆறுவிரல் ஆணென்னை ஏழரைச் சனியாகி எத்திசையும் காதலித்து நவக்கிரகம் சுற்றாற்போல்
பைத்தியமாய் சுற்றவைத்தாய்

Saturday, February 13, 2016

உல்லாசம் கொள்வேனோ

உன்னோடு கை கோர்த்து 
உன் கண்ணை நான் பார்த்து 
உன் குரல் தினம் கேட்டு 
உன் சமையல் வாய்ருசித்து 
உன் பெயரை சுவாசித்து 
உனை மட்டும் நேசித்து
உயிரோடு உள்ள வரை
உல்லாசம் கொள்வேனோ?