Pages from my lost notebook....
Sunday, February 14, 2016
ஒருநொடியும் விலகாமல்
ஒருநொடியும் விலகாமல்
இருதிவரை கைகோர்த்து மூன்றாம் உலகப்போராய் நாற்காலம் சண்டையிட்டு ஐம்புலனை அடக்கிற்ற ஆறுவிரல் ஆணென்னை ஏழரைச் சனியாகி எத்திசையும் காதலித்து நவக்கிரகம் சுற்றாற்போல்
பைத்தியமாய் சுற்றவைத்தாய்
Saturday, February 13, 2016
உல்லாசம் கொள்வேனோ
உன்னோடு கை கோர்த்து
உன் கண்ணை நான் பார்த்து
உன் குரல் தினம் கேட்டு
உன் சமையல் வாய்ருசித்து
உன் பெயரை சுவாசித்து
உனை மட்டும் நேசித்து
உயிரோடு உள்ள வரை
உல்லாசம் கொள்வேனோ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)