சட்டையைப் பிடித்து புரளவும் தெரிந்தது
கட்டிப் பிடித்து உருளவும் தெரிந்தது
நாட்கள், மாதங்கள், வருடங்கள் கழித்து,
ரத்தமும் சதையும் வளரும் வேளையில்
மூளையும் வளர நினைத்தது
சந்தோஷம் ஒன்றே குறியென்ற மழலையை
சின்னா பின்னமாக்கி,
சமூக அமைப்பில் 'தான்' என்ற என்னமோ
மூளையின் மூலையில் ஊடுருவி
உடல் முழுதும் பரவியது
சந்தோஷம் போனது
சாபங்கள் சிரித்தது
'ஏன் வளர்ந்தோம்?'
என்று தினம் எண்ணும் அளவிற்கு
வாழ்கை, வெறுப்பை வேரோடு பதித்தது
பேருந்து நிற்காமல் ஓடிடவே,
சக்கரம், ஓடியே தேய்கிறது
கடந்து வரும் சாலைகள்,
குண்டும் குழியுமாய்
தூக்கி வாரிப் போட்டிடவே
வாழ்கை என்னதும் சக்கரம்
வடிவிழந்து போகிறது
- சுந்தர் ராம் (03/08/2017) -