Tuesday, September 6, 2016

#நீ

"உனக்கு புடிச்ச விஷங்களை பத்தி சொல்லு"
.........
"என்ன மாறி விஷயம்?"
.........
"என்ன தோனுதோ சொல்லு. கண்ணை மூடிக்கிட்டு என்ன வேணும்னா சொல்லு"
.........
"ECR, அங்க வேகமா காலி ரோட் ல கார் ஓட்றது, பீச், பேப்பர் கப் ல காபி, கிரிக்கெட், காலேஜ், பஸ் பயணம், பறக்கும் ரயில், ரயில்வே ஸ்டேஷன், வால்கிங், சரவண பவன், சத்யம் தியேட்டர், பாப் கார்ன், ஆவின், மஞ்சள் வெயில், மழை, தாத்தா பாட்டி, காலங்காத்தால மரங்களுக்கு நடுல வர வெளிச்சம், குயில் சத்தம், மெசேஜ் டோன் .... அப்புறம்...."
.........
"அப்புறம் என்ன?"
.........
"நீ"
.........



Friday, September 2, 2016

முதல் பயணம்

"நான் போட்டு விடவா?" என்று அழகான புன் சிரிப்புடன் கேட்டான் அவன்

..........

ஒரு குழந்தையை போல் முகத்தை வைத்துக்கொண்டு தலை அசைத்தாள் அவள்

..........

அவள் அருகே தன் கைகளை கொண்டு சென்று சீட் பெல்ட் அணிவித்து விட்டான். இடையில் இருந்த கைகளை அவள் எடுக்கையிலே, வளையலின் சலசலப்புச் சத்தம். அவளிடம் ஏதும் வெளிப்படுத்தாமல் தனக்கு பிடித்த டியூனை ரசித்தான் அவன் 

..........

விமான விதிமுறைகளை பணிப்பெண்கள் சொல்ல, மெதுவாய் புறப்பட்ட விமானத்தில் தொடங்கியது, ட்ரெடிஷனல் அரேஞ்சுடு மேரேஜ் செய்த அவர்களின் தேன்நிலவு

..........

அவளுக்கு அதுவே முதல் விமான பயணம். உற்சாகமாய் இருந்தாள், கொஞ்சம் பயத்துடன். முதல் முறை விமானம் அதிர்ந்த போது அவனுடைய இடதுகையை நெறுக்கிப் பிடித்து கொண்டாள் அவள்

..........

மறுநொடி, இருவிழிகள் ஒன்றை ஒன்று நோக்கியது. மெலிதாய் நகைக்க உதட்டிற்கு காரணம் கிடைத்தது. விமானத்துடன் சேர்ந்து இருவரின் காதலும் பரக்கத் தொடங்கியது. அவன் தோளில் சரணடைந்தாள் அவள்

..........

இதயம் இர்ரெகுலராய் துடித்தது. 
பொருத்தம் பர்ஃபெக்டாய் இருந்தது

..........

அந்த நொடி, வெகு விரைவில் தன்னை மணக்க சம்மதித்த அவளை எண்ணி புல் அரித்தான் அவன். தன் சீல் பெல்ட்டை அணிந்த போது, அதுவரை சர்க்கஸ்ட்டிக் ஆகா இருந்த அவன் அன்று ரொமான்டிக் ஆக மாறியதை உணர்ந்து, நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்கினாள் அவள்

..........

அறிமுகமே அற்ற இருவருடன் புறப்பட்ட விமானம், இருவருக்குள் முதல் நெருக்கத்தை உணர வைத்தது. 

..........