Monday, April 20, 2015

முதல் முறை பார்த்த ஞாபகம்

அது ஒரு டியுஷன் சென்டர். அங்க ஏறக்குறைய ஒரு இருபது பேர் வருவாங்க. என் நண்பர்கள் சில பேர் கூட இருந்தாங்க. நான் கொஞ்சம் சுமாரா படிப்பேன், அதுனால பத்தாவது படிக்குற வெறிக்கும் நான் டியுஷன் பக்கமே போனது இல்ல

ஆனா நமக்கு இந்த இங்கிலீஷ் மட்டும் சரியா வரலஎன்ன தான் நம்ம வீரத்தமிழனா இருந்தாலும் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் படிச்சா இங்கிலீஷ் படிச்சி தானே ஆகணும்

என் வீட்ல எங்க நான் இங்கிலீஷ்-ல பெயில் ஆயிடுவேனோ னு பயந்து இங்கிலீஷ் டியுஷன் சேத்து  விட்டாங்க. அந்த சென்டர் லியே நான் மட்டும் தான் இங்கிலீஷ் டியுஷன் போனேன். வேற எல்லாரும் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் னு படிக்க வந்தாங்க.

தினமும் நான் தனியா உக்காந்திருப்பேன். என் நண்பர்கள் எல்லாம் அவங்க கிளாஸ் கு வர பொண்ணுங்களோட கடலை போட்டுக்கிட்டு குதூகலமா இருந்தாங்க

பாய்ஸ் ஸ்கூல் லையே படிச்சி வாழ்க்கைல பொன்னுங்களோடையே பேசாம இருந்த எனக்கு அன்னிக்கு தான் முதல் நாள். என் டேபிள் புதுசா ஒரு பொண்ணு இருந்துச்சு

எனக்கு அப்போ லாம் பொண்ண பாத்தா மண்ணை பாக்க தான் தோணும். பெருசா பொண்ணுங்களோட பேசி பழக்கம் இல்லை. இப்படியே கொஞ்ச நாள் ஓடுச்சு

ஒரு நாள் அவளா என்ன பாத்து "which school?" னு கேட்டா

நான் dav னு சொன்னேன். அப்டி தான் ஆரம்பிச்சது. 

அவ sboa படிச்சிட்டு இருந்தா. அப்போ நான் பத்தாவது, அவ ஒன்பதாவது







அவள பாக்கணும் னு தினம் சின்சியர் a ட்யுஷன் போக ஆரம்பிச்சேன்.அன்னிக்கு தான் தெரிஞ்சிது, ஒரு ஸ்கூல் படிக்குற பையனுக்கு வீட்ல வெச்சிருக்க நல்ல துணி மணி லாம் போடறதுக்கு கிடைச்ச ஒரே இடம் ட்யுஷன் தான் னு

முதல் முறையா cycle ஓட்றது புடிச்சிருந்துச்சு. மழை கூட சைக்கிள் ஓட்றது இன்னும் புடிச்சிருந்தது. வாரம் 3 நாள் மாத்திரம் இருந்த ட்யுஷன் கு தினமும் போக ஆரம்பிச்சேன்.

பரீட்சை நடக்கும் போது லாம் மத்தவங்க வர மாட்டாங்க. நாங்க ரெண்டு பேரு மட்டும்தான் வருவோம். எச்பெஷல்லி இங்கிலீஷ் பரீட்சைக்கு. ஒரு 2 மாசம் ஆச்சு. ரொம்ப நெருங்கிட்டோம்

அறியாத வயசு(உண்மையா தான் சொல்றேன்). அவ பர்ஸ் எடுத்து நோண்டுவேன். பேனா மூடி அவ மேல தூக்கிபோட்டு விளையாடுவேன். அவளுக்கும் என்ன புடிச்சிருந்துது. அது எனக்கு நல்லா தெரிஞ்சுது.

என் நண்பர்கள் லாம் எங்கள பாத்து பொறாமை பட்டாங்க. அதுல சில பேரு என் ஸ்கூல் பொண்ணோட உனக்கென்ன டா பேச்சு னு என்னை மிரட்டினாங்க

அவ வேற ஸ்கூல் ங்கறதுனால அவ பரீட்சை ஆரம்பிச்சிருச்சு. கொஞ்ச நாள் அவ டியுஷன் க்கு வரல. முதல் முறையா miss பண்றது னா என்ன னு புரிஞ்சது

அவ வீடு எங்க னு கூட எனக்கு தெரியாது. ஒரு 2 வாரம் கழிச்சு வந்தா

"என்ன பாக்கமா ஐயா வால இருக்கவே முடில போல" னு நக்கலா  கேட்டா.

நான் லைட் a சிரிச்சேன்.அவளும் என்னை miss பண்ணிருப்பா னு நினைச்சேன்சந்தோஷ பட்டேன்.




அன்னைக்கு தான் நான் அவளை பாத்த கடைசி நாள். எனக்கு பத்தாவது பரீட்சை முடிஞ்சுது. அப்புறம் நான் அந்த ட்யுஷன் பக்கமே போகல. மடையன் நான். பேசின கொஞ்ச நாள் போன் நம்பர் கூட வாங்கல

இது எனக்கு முதல் காதல்இல்ல முதல் க்ரஷ் a னு சொல்லத்  தெரியல. ஆனா நான் பேசின முதல் பெண். அவ தான்.

பத்து வருஷமாச்சு. ஆனா அவ முகம் மட்டும் லைட்டா ஞாபகம் இருக்கு.

Facebook தேடி பாத்தேன். கிடைக்கல

போன வாரம் ஸ்கைவாக் போய் இருந்தேன். அங்க அவளை மாதிரியே ஒரு பொண்ணை பாத்தேன்

இது தான் உனக்கு கெடச்சா செகண்ட் சான்ஸ் போய் சீக்கிரம் பேசு டா  னு சொல்லுச்சு என் ஹார்ட். பக்கத்துல போனேன்.

"ப்ரீத்தி" னு கூப்டேன்

அவ என்னை திரும்பி பாத்தா

அதே கண்கள்
பாம்பு படத்த மை தொட்டு வெச்ச அதே போட்டு
சிரிக்கும் போது கண்ணத்துல விழுகுற குழி
அந்த குழிக்குள்ள தவறி விழுந்த நான்

இதுக்காக தான் இவ்வளவு நாளா என் லைப் வேற பொண்ணே  இல்லையோ னு நினைச்சேன்

அவளுக்கு நான் யாரு னு தெரியல. திரு திரு னு முழிச்சா. எனக்கு பேச வார்த்தையே வரல.

மணி அடிச்சது,
லைட் எரிஞ்சது

என் தல மேல இல்ல. அவ செல் போன் .

எடுத்து "வந்துட்டியா டா. உனக்காக எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது?" னு கேட்டா

போன் கட் பண்ணிட்டு என்னை பாத்து "சொல்லுங்க" னு சொன்னா

"சாரி. தெரிஞ்ச பொண்ணு னு நெனைச்சி பேசிட்டேன்" னு சொன்னேன்

"What a coincidence. என் பேரு கூட ப்ரீத்தி தான். nice to meet you!" னு சொல்லிட்டு எழுந்து நடக்க ஆரம்பிச்சா.




அங்க இருந்து PVRக்கு அவ பாய் ப்ரண்ட்கூட போறத ஓரமா நின்னு பாத்துட்டே இருந்தேன்

முதல் முறை பார்த்த ஞாபகம். இதயத்துல வந்து வந்து போகுது. காதலிச்சி கல்யாணம் பண்றவங்கள பாக்கும் போது பொறாமையா இருக்கு :)

No comments:

Post a Comment